Wednesday, 18 September 2013

தைரோயிட் பிரச்சினை

இவ்வாறு ஹைப்போ தைராய்டு இருந்து, உடல் எடை அதிகரித்தால், அதனை குறைப்பது என்பது மிகவும் கஷ்டம். அத்தகையவர்கள் உடல் எடை குறைய வேண்டுமென்று குறைவாக சாப்பிட்டாலும், உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். தைராய்டு நோயாளிகளுக்கு ஏற்படும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று தான் எடை அதிகரித்தல். இதற்கு முக்கிய காரணம், தைராய்டு பற்றாக்குறையே. உடல் எடை அதிகரிப்பதற்கு உடலில் கொழுப்புக்கள் தங்குவதனால் மட்டும் ஏற்படுவதில்லை. உடலில் தண்ணீர் மற்றும் உப்பு அதிக அளவில் இருந்தாலும், உடல் பருமன் அடையும். எனவே தைராய்டு நோயாளிகள் சரியான டயட்டை மேற்கொண்டால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். அதற்கு டயட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இத்தகைய நார்ச்சத்து உணவுகளில் நார்ச்சத்து மட்டுமின்றி, கலோரி குறைவாக இருப்பதால், எளிதில் உணவானது செரிமானமடையும். அதுமட்டுமல்லாமல், இந்த நோயாளிகள் இத்துடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நீங்குவதோடு, எடையும் குறையும். குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு குடித்து, சரியான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். சரி, இப்போது உடல் பருமனால் அவஸ்தைப்படும் தைராய்டு நோயாளிகளுக்கு, உடல் எடை குறைய சில டயட்டை கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றினால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். டயட் சார்ட் உடல் எடை குறைய வேண்டுமெனில், முதலில் டயட் சார்ட்டினை பின்பற்ற வேண்டும். இதனால் என்ன சாப்பிடுகிறோம் என்பதை கண்காணிக்க முடியும். மேலும் ஆய்வு ஒன்றிலும், டயட் சார்ட்டினை பின்பற்றி வந்தால், அவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும் என்றும் சொல்கிறது. நார்ச்சத்துள்ள காய்கறிகள் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள பச்சை நிற காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைகோசு, கொலார்டு, பீன்ஸ், கேல் மற்றும் டர்னிப் கீரை போன்றவற்றை சாப்பிட்டால், உடல் எடை குறையும். நார்ச்சத்துள்ள பழங்கள் அவகேடோ, வாழைப்பழம், கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இத்தகைய பழங்களை தைராய்டு நோயாளிகள் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கும். பெர்ரிப் பழங்கள் பெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரியில் கொழுப்பைக் கரைக்கும் பொருள் இருப்பதோடு, ஊட்டச்சத்துக்களுடன், கலோரியும் குறைவாக உள்ளது. எனவே உடல் எடையானது கட்டுப்பாட்டுடன் இருக்கும். தண்ணீர் நீர்வறட்சியானது உடலில் ஏற்பட்டால், அவை உடலின் மெட்டபாலிசத்தை குறைக்கும். எனவே அதிகப்படியான தண்ணீரைக் குடித்து வந்தால், அதிகப்படியான பசியானது கட்டுப்படுவதுடன், வயிறு உப்புசம் குறைந்து, செரிமான மண்டலம் சீராக இயங்கும். தானியங்கள் தானியங்களில் தான் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டு நோயாளிகள் உடல் எடையை குறைக்க நினைத்தால், நார்ச்சத்துள்ள தானியங்களான கோதுமையை தினமும் டயட்டில் சேர்க்க வேண்டும். உலர்ந்த அத்திப்பழம் இந்த உலர் பழத்தில் நார்ச்சத்து மட்டுமின்றி, பல ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே ஸ்நாக்ஸாக, இத்தகைய உலர் பழத்தை சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறையும். உடற்பயிற்சி உடல் எடை குறைய ஒரு சிறந்த வழியென்றால், அது உடற்பயிற்சியின் மூலம் தான். தைராய்டு நோயாளிகள் உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்க, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் அளவை சீராக வைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். க்ரீன் டீ தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், உடல் எடை குறையும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதனை தைராய்டு நோயாளிகளும் பின்பற்றி வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைவதோடு, உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கும். அயோடின் தைராய்டில் உடல் எடையை அதிகரிக்கும் ஹைப்போ தைராய்டிசத்தை சரிசெய்ய, உணவில் அயோடின் அளவை அதிகரித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, சோர்வு நீங்கி, உடல் எடையும் குறையும்.

நினைவுதிறன் அதிகரிக்க! ! ! !

உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தான் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும். உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. உளுந்தைக் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும். உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ? சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள்,பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன்மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர்பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும்,மீன் எண்ணெயிலிருந்துகிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம். மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்துமுடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும். மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும்,காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி,தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு.மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும். பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால்அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல்வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.மூளையும் அற்புதமாக இயங்கும். உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன்அதிகரிக்கும். விஷக்கடிகளுக்குதோலுடன் கூடிய உளுத்தம் பருப்பை வாயிலிட்டு மென்று சிறிது நல்லெண்ணையுடன் விழுங்கி விட விஷம் முறியும்

பீட்ரூட்

அல்சர் அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும். சிறுநீரக சுத்திகரிப்பு பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும். மூலநோய் மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும். இரத்த சோகை பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம். புற்றுநோய் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். கொலஸ்ட்ரால் நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். செரிமான பிரச்சனை செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸை குடித்தால், செரிமானப் பிரச்சனை நீங்கும். சிவப்பணுக்கள் அதிகரிக்கும் பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். மறதி பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி (Dementia) மற்றும் ஞாபக மறதியை (Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சரும அரிப்பு சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும். தீப்புண் கையை தீயில் சுட்டுக் கொண்டால், அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும். பொடுகு பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகைப் போக்கிவிடலாம்.

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் உடலுக்கு குளிர்ச்சி என்று நாம் அனைவரும் அறிந்ததே! பீர்க்கங்காய் கொடி இனத்தை சார்ந்தது.அதாவது இக்காய் சுரைக்காய், பாவக்காய், புடலங்காய் போன்றது. மேலும் சில தகவல்கள் 1. பீர்க்கங்காய் நீர்ச்சத்தும், தாது உப்புகளும் கொண்டது. 2. பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். 3. இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். 4. வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். 5. பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். 6. பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம். 7. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். 8. ரத்த சோகை நோய் உள்வர்கள் இரும்புச் சத்து நிறைந்த காய்கறிகளை உண்ண வேண்டும். 9. அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், பீட்ரூட், முட்டைகோஸ், முருங்கைக்காய், காலி·பிளவர் போன்ற காய்கறிகளிலும், எல்லா வகை கீரைகளிலும், எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. யார் யார் இதை தவிர்கனும்: 10. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்

மல்லிகை மகத்துவம்

சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும். புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும். பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு நீங்கம்.

மஞ்சள்

இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள். *விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். *இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான். *பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது .*மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

சுவையும் பயனும்

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது. இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.